ETV Bharat / state

விண்ணப்பித்த 99.81 விழுக்காடு நபர்களுக்கு இ-பாஸ்: விவரம் வெளியிட்ட மாநகராட்சி! - Chennai Corporation

சென்னை: நேற்று(ஆக.18) சென்னை வர விண்ணப்பித்த 99.81 விழுக்காடு நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai Corporation issued e-pass at 99.81 per cent of the people

author img

By

Published : Aug 19, 2020, 1:55 PM IST

ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகிய விவரங்களைக் கொண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என, கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னைக்கு திரும்புவதற்காக இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17 தேதி முதல் கணினி வாயிலாக சென்னை மாநகராட்சி இ-பாஸ் வழங்கி வருகிறது. அதன் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அகஸ்ட் 18ஆம் தேதி வரையிலும் மொத்தம் ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 486 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 82 ஆயிரத்து 401 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 45 ஆயிரத்து 85 நபர்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று(ஆக.18) ஒருநாள் மட்டும் 13 ஆயிரத்து 853 நபர்கள் இ-பாஸ் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளனர். அதில் 13 ஆயிரத்து 826 நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 27 நபர்களில் இ-பாஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அகஸ்ட் 19ஆம் தேதி வரை மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 339 நபர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். அதிகப்பட்சமாக பிற மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் (29 ஆயிரத்து 933 இ-பாஸ் ) வழங்கப்பட்டுள்ளது. அதாவது நேற்றுவரை (ஆக.18) சென்னைக்கு வருவதற்கு விண்ணப்பித்த 99.81 விழுக்காடு நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.