சென்னை: கரோனா தொற்று மற்றும் ஒமிக்கிரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்லூரியில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்திட வேண்டும் எனச் பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள் மற்றும் பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தாத படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி தினசரி அறிக்கையை சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாரம் தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.