கரோனா தொற்றுப் பரவல், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சில மண்டலங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், மாநகராட்சியினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை, சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 71 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எட்டாயிரத்து 545ஆக உள்ளது. மீதமுள்ள 12 ஆயிரத்து 962 பேர் மட்டுமே தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தாலும், குணமடைவோரின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 105 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 30 முதல் 39 வயது உடையவர்களே இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் (19.30 விழுக்காடு) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராயபுரம் - 12,766 பேர்
தண்டையார்பேட்டை - 10,945 பேர்
தேனாம்பேட்டை - 12,432 பேர்
கோடம்பாக்கம் - 14,328 பேர்
அண்ணா நகர் - 14,196 பேர்
திருவிக நகர் - 9,652 பேர்
அடையாறு - 9,457 பேர்
வளசரவாக்கம் - 7,727 பேர்
அம்பத்தூர் - 8,551 பேர்
திருவெற்றியூர் - 4,208 பேர்
மாதவரம் - 4,380 பேர்
ஆலந்தூர் - 4,363 பேர்
பெருங்குடி - 3,936 பேர்
சோழிங்கநல்லூர் - 3,266 பேர்
மணலி - 2002 நபர்கள்
கரோனா தொற்றால் இதுவரை இரண்டாயிரத்து 564 பேர் உயிரிழந்துள்ளனர்.