ETV Bharat / state

'18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் இன்று தொடங்காது' - nandambakkam

சென்னை: போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (மே 1) தொடங்கப்படாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Commissioner Prakash
ஆணையர் பிரகாஷ்
author img

By

Published : May 1, 2021, 6:47 AM IST

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் கரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா 2ஆம் அலை காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 20 விழுக்காடு அளவிற்குப் பரிசோதனையின்போது பாசிட்டிவ் ஏற்படுகிறது. சென்னையில் தற்போது 33,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சை முறையை மூன்றாகப் பிரித்துள்ளோம், அதன்படி வீட்டிலேயே தனிமையில் உள்ளோர் 65-70 விழுக்காடு பேர். 15-20 விழுக்காடு நபர்கள் கரோனா சிகிச்சை மையங்களில் உள்ளனர். 10-13 விழுக்காடு நபர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்படும் (ஆக்சிஜன் குறைவு)மூச்சுத் திணறலால், பாதிப்படைந்துள்ளனர்.

சென்னையில் 3,500-4000 பேர் தற்போது இந்தப் பாதிப்பு நிலையில் இருக்கின்றனர். இது அதிகரிக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 1000 ஆக்சிஜன் படுக்கைகள் நந்தம்பாக்கத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன .

ஈஞ்சம்பாக்கம், மணலி ஆகிய இடங்களில் 100 ஆக்சிஜன் படுக்கைகளும், தண்டையார்பேட்டையில் 240 ஆக்சிஜன் படுக்கைகள் 10 நாளில் பயன்பாட்டுக்கு வரும். கரோனா தடுப்பு பணிக்காக 120 மருத்துவர்கள், 100 செவிலியர், ஆய்வக பரிசோதனை பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்மா மினி கிளினிக்கின் 200 மருத்துவர்களும், புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 120 மருத்துவர்களும் என மொத்தமாக 320 மருத்துவர்களும் நேரடியாக வீட்டுச் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வர். இதன்மூலம் மருத்துவக் குழுவே வீடு தேடிச் செல்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதியன்று (இன்று) உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பு இல்லை. போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் இன்று தொடங்காது.

அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும். சிலருக்கு 2ஆம் தவணை தடுப்பூசிகள் தாமதமானது உண்மைதான். வல்லுநர்கள் 2, 3 நாள் தாமதமாக இரண்டாம் தவணை செலுத்திக்கொண்டாலும் தவறில்லை எனத் தெரிவித்துள்ளனர். நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தில் 2 ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்படுகின்றன " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிராமசபை ரத்து- தமிழ்நாடு அரசு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.