ETV Bharat / state

சாலைப் பணிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்! - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
author img

By

Published : Jul 26, 2023, 8:35 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 25) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இணை ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “சென்னை மாநகராட்சி பகுதியில் பல்வேறு துறைகளின் சார்பில் மெட்ரோ பணி, குடிநீர் குழாய் புதைத்தல், பாலம், சாலை வெட்டுதல் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சாலை, மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றுக்கு போக்குவரத்து போலீசாரின் அனுமதி, இதர துறைகளின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாததால் அவை விரைந்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த பல்துறை அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது” என கூறினார். இந்த கூட்டத்தில் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிவுறுத்தல்களாவது,

உரிய அனுமதியுடன் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும்: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஏற்படுகின்ற சாலை வெட்டுக்களை அந்தப் பணிகள் முடிந்த பின் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை தொடர வேண்டும்.

தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். அனுமதியின்றி சாலை வெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. மாநகராட்சியிடம் உரிய அனுமதியைப் பெற்றவுடன்தான் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் சாலை வெட்டுக்களை மேற்கொள்ளும்போது அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களையும் சீர்செய்யும் பணிகளை தொடங்க வேண்டும்.

போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படுத்தக் கூடாது: திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பொழுது பணிகள் தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிவுறும் நாள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளை அமைத்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாத வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்.

பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் உரிய துறைகளுடன் ஒருங்கிணைந்து முடித்திட வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மின்சார வாரியத்துறை மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.