ETV Bharat / state

பூங்கா பராமரிப்பு டெண்டரில் பாகுபாடு சர்ச்சை.. சென்னை மாநகராட்சியின் அதிரடி முடிவு!

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை பராமரிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என மாநகராட்சி அணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்

Chennai corporation
Chennai corporation
author img

By

Published : Apr 29, 2023, 10:06 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சியின் ஏப்ரல் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாமன்றக் கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக மாமன்ற உறுப்பினர்கள் பூங்காக்கள் பராமரிப்பது, ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தாரர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்புடைய ஒப்பந்ததாரர் உள்பட தொடர் புகாருக்கு உள்ளாகும் ஒப்பந்ததாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, பூங்காக்கள் பராமரிப்பு ஒப்பந்தங்கள் பல தொகுப்புகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்படும் என்றார்.

ஒரு தொகுப்பு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கு மற்ற தொகுப்பு ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது என்றும் பராமரிப்புக்கான தொகை பணியின் தர அளவீட்டு மதிப்பெண் அடிப்படையில் விடுவிக்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். இந்த விதிமுறைகள் படி ஒரு ஒப்பந்ததாரர் அதிகபட்சமாக 10 பூங்காக்களில் மட்டுமே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றார். இதனால் தரமாக பூங்காக்கள் பராமரிப்பது உறுதி செய்யப்படும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக பேசிய மேயர் பிரியா, பராமரிப்புப் பணியை முறையாக மேற்கொள்ளாமல் தொடர் புகார்களுக்கு உள்ளாகும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அண்மையில் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீச்சல் குளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி, நிர்வாக ரீதியாக சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்தது.

மேலும் சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து நீச்சல் குளங்களில் சிறுவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் அவல நிலையில் கிடக்கும் பல்வேறு பூங்காங்களை பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Karunanidhi Pen Statue: மெரினாவில் 'பேனா சின்னம்' அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.