ETV Bharat / state

144 பறக்கும் படையினர் மாநகராட்சி முழுவதும் இருப்பார்கள் - ஆணையர் பிரகாஷ் - TN election

சென்னை: ஷிப்ட்டிற்கு மூன்று நபர்கள் என 144 பறக்கும் படையினர், மாநகராட்சி முழுவதும் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

prakash
பிரகாஷ்
author img

By

Published : Mar 29, 2021, 3:54 PM IST

சட்டப்பேரவை தேர்தல் குறித்து, 16 தொகுதி தேர்தல் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ், மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அம்மா மாளிகையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரகாஷ், "இன்றைய கூட்டத்தில் பணம் பரிவர்த்தனை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு ஷிப்ட்டில் மூன்று நபர்கள் என 144 பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் மாநகராட்சி முழுவதும் இருப்பார்கள். வாகனங்களை அதிகளவில் சோதனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்களுக்கு உதவியாக மண்டல அலுவலர்கள் இருப்பார்கள். ஊடகங்களில் விளம்பரம் செய்பவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணமே ஊடகங்கள் வாங்கவேண்டும். அதிகப் பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்களா முதலியவை கண்காணிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் நாளை(மார்ச்.30) ஆலோசனை நடைபெறவுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு

மேலும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட அதிக அளவில் விளம்பரம் செய்ய செலவு செய்கிறாரா என்பதைக் கண்காணிக்கத் தேர்தல் அலுவலர் ஒருவர் வேட்பாளருடன் எப்போதும் இருப்பார். சென்னையில் அனைத்து மதுபான கடைகளிலும் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் மதுபானம் விற்பனை நடைபெறுகிறதா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். நான்காம் தேதி மாலைவரை கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட அனுமதி உண்டு" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’விவசாயி மகன் என சொல்லும் முதலமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் யார் பக்கம் நின்றார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.