ETV Bharat / state

'திருமண மண்டபங்களிடமிருந்து ரூ.2,08,600 வசூல்' - சென்னை மாநகராட்சி

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Jul 18, 2021, 11:21 PM IST

சென்னை: சென்னையில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உணவு விடுதிகள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ரூ.2,08,600 அபராதம் வசூல்

அதன்படி, இதுநாள்வரை திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 238 மண்டபங்கள், உணவு விடுதிகளில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 54 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு, இதுவரை ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்து, கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் நடவடிக்கை

மேலும் மாநகராட்சி அலுவலர்களின் கள ஆய்வின்போது, நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லையானால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மண்டப உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு 51ன்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.