சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று (ஜன.1) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், நடைப்பயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை, பொதுமக்களுக்கு மணற்பரப்பில் அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு; வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்