உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று (மே 20) மட்டும் 743 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,191ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
![மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-coroporation-corona-list-7209208_21052020111305_2105f_1590039785_251.jpg)
மேலும், 2,826 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை - பொதுமக்கள் பீதி