சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள், மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தையும்; ராயபுரம், தேனாம்பேட்டையில் 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்தும் சிகிச்சைப் பெற்று வருபர்களின் விழுக்காடு குறைந்தும் வருகிறது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை 3 மண்டலங்களிலும் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆறு விழுக்காடாகவும் ராயபுரத்தில் 5 விழுக்காடாகவும் உள்ளது.
ஆனால், ஆலந்தூரில் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடாக உள்ளது. அதேபோல், ஆலந்தூரில் மட்டுமே குணமடைந்தவரின் எண்ணிக்கை 88 விழுக்காடாக உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 9 ஆயிரத்து 868 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 97 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் பட்டியல்:
கோடம்பாக்கம் - 1, 151 பேர்
அண்ணா நகர் - 1, 114 பேர்
ராயபுரம் - 793 பேர்
தேனாம்பேட்டை - 868 பேர்
தண்டையார்பேட்டை - 664 பேர்
திரு.வி.க. நகர் - 849 பேர்
அடையாறு - 827 பேர்
வளசரவாக்கம் - 732 பேர்
அம்பத்தூர் - 729 பேர்
திருவொற்றியூர் - 216 பேர்
மாதவரம் - 367 பேர்
ஆலந்தூர் - 663 பேர்
சோழிங்கநல்லூர் - 279 பேர்
பெருங்குடி - 439 பேர்
மணலி - 150 பேர்
கரோனா தொற்று: 10 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை - சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
சென்னை: ஆலந்தூரை தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் கீழாக உள்ளது.