ETV Bharat / state

பிணையில் வந்து குற்றம் செய்தவர்களுக்கு பிணை ரத்து: காவல் ஆணையர்!

author img

By

Published : Oct 27, 2020, 3:23 PM IST

சென்னை: குற்ற வழக்கில் கைதாகி பிணையில் வந்து மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் 50 குற்றவாளிகளுக்கு பிணை ரத்துசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்கில் கைதாகி மீண்டு குற்றம் செய்வர்களுக்கு பிணை ரத்து  செய்யப்பட்டு சிறையில் அடைப்பு -காவல் ஆணையர்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் காவல் துறையால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம், தற்போது புனரமைக்கப்பட்டு திருவல்லிக்கேணி காவல் துறை துணை ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை இன்று (அக். 27) சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவிலேயே பழமைவாய்ந்த கட்டடங்களில் ஒன்றான எழும்பூரில் உள்ள சென்னை காவல் துறை பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டடத்தை, காவல் துறை அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

பணிகள் முடிவடைந்து காவல் துறை அருங்காட்சியகம் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, கடந்த இரண்டு மாதத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிணையில் வந்த 50 குற்றவாளிகளின் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் பிணை ரத்துசெய்யப்பட்டு மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை உள்ள குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படும் நபர்கள், நிலையான வழிகாட்டுதல்படி பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால் பிணை ரத்துசெய்யப்படுகிறது” என்றார்

இதையும் படிங்க...மருத்துவ கல்லூரி மாணவர் மரண வழக்கில் வெளிப்படையான விசாரணை தேவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.