பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் சி.டி. ஸ்கேன் நிலையங்களில் நோய் தொற்றை கண்டறிய வரும் நபர்களின் விவரம் குறித்து தெரியப்படுத்த சென்னை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்றை கண்டறிய தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், பலரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் நேரடியா சி.டி. ஸ்கேன் சென்டர்களில் மார்பக ஸ்கேன் செய்கின்றனர்.
இச்சூழலில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 15 மண்டலங்களில் உள்ள 40 சி.டி. ஸ்கேன் நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் மார்பக ஸ்கேன் செய்யும் கரோனா நோயாளிகளின் விவரங்களை தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இப்படி பல இடங்களில் நேரடியாக ஸ்கேன் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதால், கரோனா தொற்று எண்ணிக்கை குறித்த முழு விவரம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி