ETV Bharat / state

SIM Box மூலம் வெளிநாடுகளுக்கு அழைப்பு - 2 பேருக்கு தீவிரவாத தொடர்பா? - சட்டவிரோத சிம்பாக்ஸ் கருவி மோசடி

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் சிம்பாக்ஸ் கருவி மூலம் வெளிநாடுகளுக்கு அழைப்பு மேற்கொண்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்
author img

By

Published : Nov 25, 2022, 12:10 PM IST

சென்னை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இளநிலை தொலைத் தொடர்பு துறை அதிகாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விற்பனை செய்யப்பட்ட 150 சிம் கார்டு எண்களை ஆராய்ந்ததில் கடந்த அக்டோபர் முதல் சட்டத்திற்கு புறம்பான டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகள் அமைந்தகரை பகுதியில் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அமைந்தகரை பகுதியில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் 4 சிம்பாக்ஸ்கள், 130 சிம்கார்டுகள், 2 மோடம், 1 லேப்டாப் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வீடு வாடகைக்கு எடுத்து சட்டவிரோத செயலில் ஈட்பட்டது தெரியவந்தது. வீட்டு உரிமையாளர் உதவியுடன் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

சிம்பாக்ஸ் கருவி மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தகவல்

ஜாகீர் உசேன் அளித்த தகவலில் சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த சல்மான் ஷெரிப் என்பவரயும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சல்மான் ஷெரிப் சிம்பாக்ஸ் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், வேலூரிலும் இதேபோல் டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்திய வழக்கில் சல்மான் ஷெரிப் கைதானதையும் போலீசார் கண்டுபிடித்தனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்ற சல்மான் ஷெரிப் பின்னர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

பணம் சம்பாதிக்கும் முனைப்பில் ஆன்லைன் மூலம் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்ட சல்மான் கொரியர் சர்வீஸ் மூலம் 4 சிம்பாக்ஸ் கருவிகள், 130 சிம்கார்டுகளை வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக ஜாகீர் உசேன் மூலம் அமைந்தகரை பகுதியில் வீடுகள் வாடகைக்கு எடுத்து டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் செட்டப் அமைத்து அதன் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜாகீர் உசேன், சல்மான் ஷெரீப்புடன் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் செட்டபை உருவாக்க 35 ஆயிரம் ரூபாய் நிதி அளித்து, கிளவுட்(Cloud) மூலம் இருவரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த மக்மூத் என்பவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை உள்பட 7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - கொலீஜியம் பரிந்துரை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.