ETV Bharat / state

சென்னை புத்தகக் காட்சி குறித்த தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

சென்னை: புத்தகக் காட்சி குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் சென்னை புத்தகக் காட்சி Chennai Book Fair Chennai Book Fair Starts
Chennai Book Fair Starts
author img

By

Published : Jan 10, 2020, 8:02 AM IST

Updated : Jan 10, 2020, 9:57 AM IST

சென்னையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. இந்தப் புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதிவரை 13 நாள்களுக்கு நடைபெறும். ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையிலும் புத்தக விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் கீழடி- ஈறடி என திருவள்ளுவரை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு மணல் சிற்பமும், கீழடி வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும்வகையில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை புத்தகக் காட்சி

இனிவரும் நாள்களில் எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் கலந்துகொள்ளும் எழுத்தாளர் முற்றம், புதிய புத்தக வெளியீடுகள், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் திறந்த அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓவியப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.

அதேபோல், இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படங்கள், புத்தங்கள் தொடர்பான ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். சாதாரண நாள்களில் மாலை 3 மணிமுதல் 9 மணிவரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரையும் புத்தக் காட்சி நடைபெறும்.

இதற்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்லும்வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது புத்தகக் காட்சி நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு அருகே மெட்ரோ ரயில் சேவை உள்ளதால் மக்கள் எளிதாகச் சென்று வர முடியும்.

இதையும் படிங்க:

சென்னையில் புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த முதலமைச்சர்

Intro:Body:சென்னை-

சென்னையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சென்னை புத்தகக் காட்சி இன்று (9.1.2020) தொடங்கியுள்ளது. வரும் 21 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு இந்த புத்தகக் காட்சி நடைபெறும். ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையிலும் புத்தக விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் புத்தக் காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 750- க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏரளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியில், கீழடி- ஈறடி என திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு மணல் சிற்பமும், கீழடி வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் வகையில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் எழுத்தாளர்கள்- வாசகர்கள்- பதிப்பாளர்கள் கலந்துகொள்ளும் எழுத்தாளர் முற்றம், புதிய புத்தக வெளியீடுகள், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்களும் கலந்துகொள்ளும் திறந்த அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும். பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓவியப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.

இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படங்கள், சமூக அக்கறை மற்றும் புத்தங்கள் தொடர்பான ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.

இந்த புத்தகக் காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

சாதாரண நாட்களில் மாலை 3 மணி முதல் 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரையும் புத்தக் காட்சி நடைபெறும். இதற்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது புத்தக் காட்சி நடைபெறும் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு அருகே மெட்ரோ ரயில் சேவை உள்ளதால் மக்கள் எளிதாக சென்று வர முடியும்.
Conclusion:visuals, p2c in live kit

Last part of the p2c need to be edited.
Last Updated : Jan 10, 2020, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.