இது தொடர்பாக, தெற்கு ரயில்வே அறிக்கையில், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 7.50 முதல் மதியம் 1.50 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்களின் சேவைகள் காலை 8.10 முதல் மதியம் 2.10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 19 ரயில் சேவைகள் இதன்மூலம் ரத்தாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் முதல் மின்சார ரயில் மதியம் 2.00 மணிக்கு சேவை தொடங்கவுள்ளது. அதேபோல், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு ரயில் சேவை இயங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.