சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அருகே யூனியன் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் பணம் எடுக்கவந்த வாடிக்கையாளர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இருக்கும் பகுதி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகமடைந்த அவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வங்கி அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது, யூனியன் வங்கியுடன் கார்ப்பரேட் வங்கி, ஆந்திர வங்கி இணைக்கப்பட்டுள்ளதால் மென்பொருள் பதிவீட்டிற்காக பணம் வாங்கி அலுவலர்களால் எடுக்கப்பட்ட நிலையில் பணம் வைக்கும் பகுதியை மூட முடியாமல் அப்படியே விட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த ஏ.டி.எம். மையம் மூடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: குமரியில் 27 மூட்டை குட்கா, பான் மசாலா பறிமுதல்: 2 பேர் கைது!