ETV Bharat / state

'தாய்மொழியில் படிப்பதே மிக சிறந்தது' - துணைவேந்தர் சூரப்பா - press meet

சென்னை: பள்ளிகளில் தாய்மொழியில் படித்தால் நன்றாக கற்கலாம் என்று அண்ணை பல்கலை. துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

soorappa
author img

By

Published : Aug 28, 2019, 2:37 PM IST

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நூலக வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் 55 புத்தகப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா, மாணவர்கள் பள்ளிகளில் தங்களது தாய்மொழியில் படித்தால் நன்றாக கல்வி கற்க இயலும் என்றும் பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் தங்கள் தாய்மொழியிலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர் எனவும் கூறினார். அறிவியல் பாடங்களை மாணவர்கள் தாய்மொழியில் கற்றால் மட்டுமே நல்ல அடித்தளம் கிடைக்கும் என்றும் புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரை அதனை அனைத்து தரப்பினரின் ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்த துணைவேந்தர் சூரப்பா

தொடர்ந்து பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் ஒன்றிரண்டு மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தால் எந்த முடிவினையும் எடுக்க இயலாது என்றும் அரசாங்கம், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், கல்லூரிகள் ஆகிய அனைத்து தரப்பினரின் ஒருங்கினைப்போடு மட்டுமே மாணவர்கள் எதிர்கால நலன்சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக் கழகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்றும் துணைவேந்தர் சூரப்பா கூறினார்.

Intro:

பள்ளியில் தாய்மொழியில் படித்தால் நன்றாக கற்கலாம்

துணைவேந்தர் சூரப்பா தகவல் Body:

பள்ளியில் தாய்மொழியில் படித்தால் நன்றாக கற்கலாம்

துணைவேந்தர் சூரப்பா தகவல்
சென்னை,
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் நூலக வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் 30 ந் தேதி வரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அண்ணாப் பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா துவக்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் 55 புத்தகப் பதிபாளர்களின் புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியின் மூலம் சமீபத்தில் வெளியான புத்தகங்களின் பதிப்புகளை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் பார்வையிட்டு, தங்களின் நூலகத்திற்கு தேவையான புத்தங்களை வாங்கிக் கொள்ளலாம்.

புத்தக் கண்காட்சியை துவக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா , மாணவர்கள் பள்ளி அளவில் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறப்பான கல்வி கற்க இயலும். பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் தங்கள் தாய்மொழியிலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அறிவியல் பாடங்களை மாணவர்கள் தாய்மொழியில் கற்றால் மட்டுமே நல்ல அடித்தளம் கிடைக்கும்.

புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரை அதனை அனைத்து தரப்பினரின் ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும் . கடந்த முறை கல்வி கொள்கை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் இருந்த நல்ல அம்சங்கள் நிறைவேற்றபடாமல் போனது . எனது தனிப்பட்ட கருத்தாக கூறவிரும்புவது, எந்தத்திட்டத்தையும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

பொறியியல் கல்லூரிகளில் 1மாணவர் 2மாணவர் சேர்ந்துள்ள கல்லூரிகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தால் எந்த முடிவினையும் எடுக்க இயலாது .அரசாங்கம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், கல்லூரிகள் ஆகிய அனைத்து தரப்பினரின் ஒருங்கினைப்போடு மட்டுமே மாணவர்கள் எதிர்கால நலன்சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்களின் நலன் என்பது முக்கியம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக் கழகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.