சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2023 ) இன்றும் நாளையும் நடக்கிறது என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 25ந் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மோடி கருத்து விவகாரம் - பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணை - ராகுலை துரத்தும் வழக்குகள்?
CEETA, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க்,எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26 ந் தேதி நடைபெறுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து,
மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்கள் பிப்ரவரி 28 ந் தேதி வரையில் விண்ணப்பித்தனர். இறுதி ஆண்டில் இறுதிப் பருவத் தேர்வு எழுதும் 2022-23 ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள் முதுகலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 11 ஆம் தேதி https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 15 நகரங்களில் 40 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை எழுதுவதற்கு 39 ஆயிரத்து 249 பேர் பதிவு செய்தனர்.
டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை 25 ஆம் தேதி காலையில் 9 ஆயிரத்து 820 பேரும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மாலையில் 24 ஆயிரத்து 468 பேரும் எழுதுகின்றனர். CEETA-PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை நாளை (26ஆம் தேதி) 4 ஆயிரத்து 961 பேர் எழுத உள்ளனர்.
முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் இந்தாண்டு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரி, உறுப்புக்கல்லூரிகள், அரசு பாெறியியல் கல்லூரிக்கான கலந்தாய்விற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு! - எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின் முதல் முறையாக சந்திப்பு!