சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.சில மாவட்டங்களில் கன மழை பெய்வதையும், குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிக கனமழை பெய்வதையும் காணமுடிகிறது.
முன்னதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், நாகப்பட்டினம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெய்துவரும் கனமழை தொடரும் என்றும், அப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்திருந்தது. அதனை அடுத்து அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. ஆட்சியர் வெளியிட்ட அப்டேட்!
-
Holiday declared for all schools and colleges in Thiruvallur district on November 15 due to heavy rainfall: District Collector Dr T Prabhushankar pic.twitter.com/KiZS4Mn6rc
— Press Trust of India (@PTI_News) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Holiday declared for all schools and colleges in Thiruvallur district on November 15 due to heavy rainfall: District Collector Dr T Prabhushankar pic.twitter.com/KiZS4Mn6rc
— Press Trust of India (@PTI_News) November 14, 2023Holiday declared for all schools and colleges in Thiruvallur district on November 15 due to heavy rainfall: District Collector Dr T Prabhushankar pic.twitter.com/KiZS4Mn6rc
— Press Trust of India (@PTI_News) November 14, 2023
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலயால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை (நவ.15) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி நாளை (நவ.15), மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து நாளையும் (நவ.15) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வேறோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான புளியமரம்.. பொதுமக்கள் வேதனை!