சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட போது, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் வெளிநாட்டு பணத்தை சென்னையைச் சோ்ந்த கவுங்சிக்(22) உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் சவுதி ரியால் வெளிநாட்டு பணத்தை துபாய்க்கு கடத்த முயன்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.