ETV Bharat / state

ஏர் இந்தியா விமானத்தில் இருக்கையின் கீழ் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்! - சென்னை சர்வதேச விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கப்பசையை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Chennai
Chennai
author img

By

Published : Mar 13, 2023, 8:14 PM IST

சென்னை: துபாயிலிருந்து இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி சென்றனர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிருந்தது. எனவே பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விமானத்திற்குள் பயணிகள் அமரும் இருக்கை ஒன்று வழக்கத்துக்கு மாறாக உயர்ந்து இருந்தது. அதை சரி செய்ய முயன்றபோது, இருக்கைக்கு கீழே பிளாஸ்டிக் பவுச் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பணியாளர்கள் விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பிளாஸ்டிக் பவுச்சை சோதனை செய்தனர். அப்போது பவுச்சில் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள், அந்தப் பவுச்சுக்குள் இருந்த 1.6 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 78.2 லட்சம் ரூபாய் என தெரிகிறது.

சுங்க அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, துபாயில் இருந்து கடத்தி வந்த தங்க பசையை, விமானத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். விமானத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா, விமானநிலைய நிலைய வருகை பகுதியில் உள்ள கேமரா ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த 8ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 1.4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த விமான ஊழியரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் கேபின் க்ரூ ஊழியர் ஷாபி, சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கப் பசையை தனது கைகளில் சுற்றிவைத்து கடத்தி வந்தார்.

அதேபோல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில், துபாயிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தங்கக்கட்டிகளை தனது முதுகில் டேப் போட்டு ஒட்டி வைத்து கடத்தியது தெரியவந்தது. அவர் கடத்தி வந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 705 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர் 1 கிலோ 110 கிராம் தங்கத்தை உள்ளாடையில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 57 லட்சம் ரூபாய் என தெரிகிறது.

இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.