நாளை நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் தேசியக் கொடி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளும் சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளும் இந்த வண்ண விளக்குகளைப் பார்த்து மகிழ்ச்சியடைக்கின்றார்கள். வண்ணவிளக்குகளால் மிளிர்வதைப் பார்க்கும் பயணிகள் தங்கள் கைபேசிகளில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மோப்ப நாயை வைத்து மத்திய தொழிற்படை காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனையின் பிறகே அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'அமாவாசை பௌர்ணமியான கதை' - வரலாற்று நினைவோடு வழிபாடு