நிவர் புயல் காரணமாக சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலைய ஓடுதளப் பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், விமானங்கள் தரை இறங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை விமான சேவையை நிறுத்திட சென்னை விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்கள் மாற்றுத் தேதியில் விமானத்தில் பயணம் செய்துகொள்ளலாம் என்ற ஒரு முடிவும் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் சேவையின்றி சரக்கு விமான சேவையும் இருக்காது என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர்.