சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 5ஆவது தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(48). ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், நேற்றிரவு
(ஜூலை 10) அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பின்னர், செல்வத்தின் உடல் உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்ஸோவில் கைது!