சென்னை தாம்பரம் அடுத்த கிருஷ்ணாநகர் பிரபல பிரியாணி கடையில் வடமாநிலத்தை சேர்ந்த நிக்கீல் என்பவர் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில் இன்று(பிப்.10) பிற்பகல் இவர் பிரியாணி மாஸ்டரின் மோட்டார் சைக்கிளை எடுத்துகொண்டு அருகில் உள்ள அவர் தங்கும் இடத்திற்கு செல்லும்போது திடீரென நிலைதடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதினார்.
இதில், நிக்கீல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மது அருந்தியபோது இரண்டு ரவுடிகள் வெட்டி கொலை!