ETV Bharat / state

கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியதால் ஒருவர் உயிரிழப்பு - chennai district news

சென்னை: கஞ்சா புகைத்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கஞ்சா கும்பல் அட்டகாசம்
கஞ்சா கும்பல் அட்டகாசம்
author img

By

Published : Aug 20, 2020, 6:16 PM IST

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (47) இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். தற்போது இவர்கள் சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள புத்தர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ராஜசேகர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

ஜெயலட்சுமி சேலையூர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நேற்று (ஆக.19) ராஜசேகருக்கு இரவு பணி என்பதால் வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் அதனை விட்டுவிட்டு சாலையைக் கடந்துள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு பேர் ராஜசேகர் மீது மோதி உள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அங்கிருந்த வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுத்திய ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இருப்பினும், மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், ராஜசேகர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண் (21) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் (22) என்பதும் தெரியவந்தது.

கஞ்சா புகைத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது. சென்னையில் தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் அதிகரித்து வருகிறது.

போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. கஞ்சா வியாபாரிகளை காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களும், குற்றச் சம்பவங்களும் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனை: நால்வர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.