தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து விஸ்வருபம் எடுத்து வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இருப்பினும் நோய்த் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் சிறு அறிகுறிகள் இருப்பவர்களை கரோனா மையங்களில் தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், சிறுபான்மையினர் தனியார் கல்லூரி போன்ற பல இடங்களில் கரோனா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மூன்று ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் இரண்டு செவிலியர்கள், இரண்டு மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்தில் இருக்கும் சிறுபான்மையினர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையத்தில் சுமார் 500 பேர் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க : 'மாநிலத்தின் நிதி நிலை பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' - ஸ்டாலின்