தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு மாநில அளவில் தயார் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் தேர்வு இன்று நடைபெற்றது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் நேற்றே பரவியது. ஆனால் அந்த வினாத்தாள் வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை என கல்வித்துறை அலுவலர்கள் மறுத்தனர். ஆனால் ஹலோ அப்ளிகேஷனில் வெளியான வினாத்தாளும் தற்பொழுது நடைபெற்ற வேதியியல் தமிழ் மொழி வினாத்தாளும் ஒரே மாதிரியாக உள்ளது.
![சமூகவலைதளத்தில் வெளியான வினாத்தாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-chemistry-12-question-paper-script-7204807_20122019132530_2012f_1576828530_703.jpg)
இதனால் ஆசிரியர்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். ஏற்கனவே 9 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியானது. இது போன்று சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியாகி வருவது கல்வித்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும ் படிங்க: குமரியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றம்- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!