தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான சேர்க்கை, ஜூலை 26ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
பொதுவாக பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் இருக்கும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து காரணமாக பெரும்பாலான மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளது.
இதனால் தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வேதியியல் தேவையில்லை
அதில், கணிதம், இயற்பியல், விருப்பப்பாடம், ரேண்டம் எண், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேதியியல் பாட மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதது ஏன்?