ETV Bharat / state

பொறியியல் படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

author img

By

Published : Jan 24, 2022, 6:32 PM IST

பொறியியல் படிப்புகளுக்கான நடப்பு பருவத் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

பொறியியல் படிப்பு
பொறியியல் படிப்பு

சென்னை: கரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடப்பு பருவத் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான பருவத்தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

காலை, மாலை என இருவேளைகளில் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறுகிறது. மேலும் மண்டலம் வாரியாகத் தேர்வு அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பருவத் தேர்வுகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகள் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பருவத் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் தேதியில் தொடங்குகின்றது.

வினாத்தாள்கள்

பருவத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைப் பதிவிறக்கம் செய்து தாள்களில் விடைகளை எழுதி, மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் மீது ஏன் திடீர் பாசம்'- அகிலேஷ் யாதவ்வுக்கு பாஜக கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.