கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அருகே சோதனைசாவடியில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ். எஸ். ஐ வில்சனை இரு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடினர்.
இது தொடர்பாக கவியாக்காவிளை காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்கள் அப்துல் சமீம், தவ்பீக் என்பது தெரியவந்து.
அவர்கள் இருவரையும் கர்நாடகாவில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி என்.ஐ.ஏவுக்கு (தேசியப் புலானாய்வு முகமைக்கு) வழக்கை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அல் உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காஜா மைதீன் என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே ஈரானில் ஐ. எஸ் அமைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் காஜா மைதீன் மகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாபர் அலி, அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை தீவிரவாத அமைப்பில் இணைத்துகொண்டு சதி திட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாட்டை தகர்க்கவும், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு கர்நாடக பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வந்து கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்த எஸ்.எஸ். ஐ வில்சனை தவ்பீக், அப்துல் ஷமீம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
அப்போது கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கி இருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த காஜா மொய்தீன், இஜாஸ் பாஷா, ஜாபர் அலி, மகபூப் பாஷா உட்பட ஆறு பேரை என்.ஐ.ஏ காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று(ஜூலை 10) வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீது சென்னை நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... சூடுபிடிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு