ETV Bharat / state

ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியாண்டு மாற்றம் - chennai academic year change

கரோனா தொற்றின் காரணமாக ஆசிரியர் பட்டய பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை என மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

Change of academic year for teacher training

author img

By

Published : Aug 11, 2021, 7:59 AM IST

சென்னை : கரோனா தொற்றின் காரணமாக ஆசிரியர் பட்டய பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் ஆகஸ்ட்வரை என மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டில் 30 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், ஒன்பது அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 39 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 402 இருந்தன. ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் 2017ஆம் ஆண்டு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 279 என குறைந்தது.

அதேபோல் 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 12 ஆக குறைக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி நடப்பாண்டிலும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைத்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

கல்வியாண்டு மாற்றம்

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா ஜூலை 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளில் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டது.

2021-22ஆம் கல்வியாண்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,830 மாணவர் சேர்க்கை இடங்களுக்கும், 13 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,100 மாணவர் சேர்க்கை இடங்களும், 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆயிரத்து 50 மாணவர் சேர்க்கை இடங்களும் என 46 நிறுவனங்களில் 3 ஆயிரத்து 150 இடங்களும் மாணவர் சேர்க்கை செய்யப்படவுள்ளது.

மாணவர்கள் சேர்க்கை

அரசால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒற்றை சாளர முறையை பின்பற்றி தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை செய்யலாம். அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தவறான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி காண கல்வி ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை என்பது 2021-22ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் முதல் ஆகஸ்ட் மாதம் வரை என மாற்றம் செய்யப்படுகிறது.மாணவர்களை சேர்ப்பதற்கான விளம்பரம் வெளியிட்டு ஆகஸ்ட் மாதம் நான்காவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் முதல் வாரம் வரை சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

சுயநிதி, உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

வகுப்பு தொடக்கம்

ஆசிரியர் கல்வி பயிற்சி வகுப்புகளை செப்டம்பர் மாதம் முதல் மாதம் முதல் தொடங்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2022 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.