சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.30) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் மழை
01.10.2021: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
02.10.2021 முதல் 04.10.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தென் மாவட்டங்கள் ( தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்) மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையின் வானிலை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 9செ.மீ, பெருங்கலூர் (புதுக்கோட்டை) 8செ.மீ, ஈரோடு 7செ.மீ, திருச்செங்கோடு (நாமக்கல்)செ.மீ, மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 5செ.மீ, அதிரமப்பட்டணம் (தஞ்சாவூர்), சிவகங்கை தலா 4செ.மீ, புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), முத்துப்பேட்டை (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 3செ.மீ, கறம்பக்குடி (புதுக்கோட்டை), சோழவந்தான் (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), சோலையாறு (கோவை), வல்லம் வாடிப்பட்டி (மதுரை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 2செ.மீ, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ராமநாதபுரம், வேலூர் திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா1செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடல்: நேற்று(29.09.2021) தெற்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
02.10.2021 முதல் 04.10.2021 வரை : குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகையால் மேற்கூறிய இடங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்