வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் என்றும், வெப்பநிலை வழக்கத்தைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செண்டி மீட்டரும், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.