சென்னை: கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.05) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'வரும் பிப்.6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதுமில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Thaipusam Festival: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகல கொண்டாட்டம்!