ETV Bharat / state

வெளியூர் போகும் பிளான் இருந்தா பாத்து மக்களே..! தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு.. - chennai

TN Rain Update: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில், அடுத்த வரும் நாட்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெளிய போகும் பிளான் இருந்தா பாத்து மக்களே..! தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 5:55 PM IST

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில், அடுத்த வரும் நாட்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பருவமழை தொடங்கும் முன்னே பல பகுதியில் மழையானது பெய்யத் தொடங்கிவிட்டது. மேலும் தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாக, மேற்கு திசையில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. அதனால் சென்னை உள்பட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், தினமும் மாலையில் மழையானது பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) உள்ளிட்ட பகுதிகாளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) உள்ளிட்ட பகுதிகாளில் தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் சென்னை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் 3 செ.மீ முதல் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஐ விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.