ETV Bharat / state

பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு - விசாரணை நாளை ஒத்திவைப்பு

author img

By

Published : Jun 16, 2021, 1:18 PM IST

பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.

பிளஸ் டூ தேர்வு ரத்து
பிளஸ் டூ தேர்வு ரத்து

சென்னை : கரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து 12 ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த கடந்த ஐந்தாம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் "கடந்த ஆண்டு கரோனா முதலாவது அலையினால் 11ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தான், தற்போது 12 ம் வகுப்பு பயின்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பாடத்திட்டத்தை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் உள்ளன.

இதில் 2020 - 2021 கல்வியாண்டில் 90% அரசுப் பள்ளிகளிலும் 80% அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும்,50% ஆங்கிலவழி தனியார் பள்ளிகளிலும் இணையவளிக் கல்வி வகுப்புகள்,காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை.

ஆனால் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90% பள்ளிகளில் இணையவழிக் கல்வி வகுப்புகள்,காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் பன்னிரண்டாம் வகுப்புகளை நடத்தி முடித்து இருந்தனர். அதனால் அனைத்து வகையான மேல் படிப்புகளுக்கும் அவர்களின் பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வும், செப்டம்பர் முதல் வாரத்தில் ஐஐடிக்கான நுழைவுத் தேர்வும் நடைபெற்றது. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமலும் தமிழ் நாடு அரசின் கல்வித் துறை பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு என்று தெரிவித்துள்ளார்.

கேரளா, பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டதாகவும், அசாம் மாநிலம் ஜீலை மாதம் நடத்துவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வை ரத்து செய்தது, முறையாக பயின்ற மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் நடவடிக்கை, அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்டிருக்க வேண்டும், கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இன்னும் ஒரிரு மாதங்கள் பொறுத்திருந்திருக்கலாம்.

ஏற்கனவே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டான 2020-2021 தமிழ் நாடு சட்டக்கல்லூரி சேர்க்கை ஜனவரி'2021 வரையிலும், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி' 2021 வரையிலும், மருத்துவ படிப்பு மற்றும் ஜேஇஇ சேர்க்கை இந்தியா முழுவதும் நவம்பர் 2020 ல் தான் நடைபெற்றது.

எனவே, தமிழக அரசு உடனடியாக கல்வியாளர்களை கொண்டு ஒரு குழுவை உருவாக்கி உயர்கல்விகளை நெறிப்படுத்தி வரும் யூஜிசி, மெடிக்கல், டெண்டல், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ மற்றும் பார்கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.