ETV Bharat / state

நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்! - முதன்மைக் கல்வி அலுவலர்கள்

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தகுதிப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!

author img

By

Published : Nov 4, 2020, 9:17 PM IST

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலின்படி 6ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஒரு மாணவர் 6, 7, 8 வகுப்புகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அல்லது அரசு நடுநிலைப் பள்ளியிலும், 9 ,10 வகுப்புகள் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியிலும், 11, 12ஆம் வகுப்பு அரசு மேல் நிலை பள்ளியிலும் பெற்றவராக இருக்கலாம்.

6 முதல் 10ஆம் வகுப்புகளில் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 11, 12ஆம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று இருக்கலாம். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்திருக்கலாம்.

நீட் தேர்வு பயிற்சி பெற்று மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இறுதியாக மேல்நிலை கல்வி பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மட்டுமே கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர் அவர்கள் பயின்ற பிற பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கையெழுத்து பெற்று வரவேண்டும் என்று அலைக்கழிக்க கூடாது.

மாணவர் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை என மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பம் இட வேண்டும். மேலும் மாணவர்கள் படித்த விவரத்தை பதிவேடுகள் உடன் சரிபார்த்து அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்கள், தவறுகள் ஏதும் இன்றி வழங்கப்பட வேண்டும். தலைமையாசிரியர் வழங்கிய சான்றிதழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரிபார்த்து கையொப்பம் இட வேண்டும்.

மருத்துவப் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தேவையான வழிகாட்டுதல்களையும் தலைமையாசிரியர்கள் வழங்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் எக்காரணம் கொண்டும் 24 மணி நேரத்திற்கு மேல் சான்றிதழ் வழங்காமல் இருக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.