ETV Bharat / state

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் ரூ.2.98 லட்சம் பறிமுதல்! - நாங்குநேரி

சென்னை: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் இதுவரை ரூ.2.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

satyabrata sahu
author img

By

Published : Oct 3, 2019, 9:47 PM IST

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியதாவது, இதுவரை 29 லட்சத்து 50 ஆயிரத்து 633 வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில், வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்து உள்ளனர். சுமார் 1.65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பித்து உள்ளனர். வரும் 15ஆம் தேதி வரை இந்த திருத்தங்கள் நடைபெறும். பொதுமக்கள் உடனடியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை எதிர்பார்த்த அளவில் 5 சதவிகிதம் வரை மட்டுமே வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, நாளைக்குள் ராதாபுரம் தொகுதி கடைசிச் சுற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள், தபால் ஓட்டு உள்ள பெட்டிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும் அவர், இடைத்தேர்தல் நடக்க உள்ளத் தொகுதிகளில் இதுவரை ரூ.2.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.1.34 லட்சம் நாங்குநேரி பகுதியில் பிடிபட்டு உள்ளது. ஆயிரத்து 917 பேர் விக்கிரவாண்டியிலும், ஆயிரத்து 460 பேர் நாங்குநேரியிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இடைத்தேர்தல் நடக்க உள்ளத் தொகுதிகளில் இதுவரை 18 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. செலவின பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

இதையும் படிங்க: ‘தேர்தல் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகளின் கண்களுக்கு மக்கள் தென்படுகிறார்கள்’

Intro:Body:

Ceo news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.