சென்னை: கடந்த சில நாள்களுக்கு முன்பு கரையைக் கடந்த நிவர் புயல் சென்னையை ஒட்டியுள்ள மாமல்லபுரம் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயலால் பல சேதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வுசெய்தனர். இந்தக் குழுவுக்கு மத்திய அரசு உள் துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமை ஏற்றார்.
மேலும், இக்குழுவில், மத்திய வேளாண் துறையின் எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி இயக்குநர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத் துறை மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித் துறை இயக்குநர்களில் ஒருவரான பர்தெண்டு குமார்சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குநர் ஓ.பி. சுமன், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் தர்மவீரர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டின், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குநர் ஜெ. ஹர்ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழுவினர், புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு பகுதியினை இன்று ஆய்வுசெய்தனர்.
இதையும் படிங்க: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சிறப்பு மத்திய குழு ஆய்வு