ETV Bharat / state

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க கால நீட்டிப்பு - ctet update

சென்னை: மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 2ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

central-teacher-eligibility
central-teacher-eligibility
author img

By

Published : Feb 21, 2020, 9:05 PM IST

இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பபடுகிறது. மார்ச் 5ஆம் தேதி மாலை 3 மணி 30 நிமிடம்வரை இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தேர்வு மொழி, தேர்வு மையங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள www.ctet.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.