ரயில் நிலையங்களிலிருந்து மாவட்ட வடிகாலுக்கு வெளியேறும் கழிவுநீரின் அளவில் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல், எவ்வித மறுசூழற்சியும் செய்யாமல் நகர கழிவுநீர் கால்வாயில் நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் கலக்கும் ரயில் நிலையங்கள் சிவப்பு ரயில் நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் புதிய கட்டங்கள் மற்றும் திட்டங்களை அமல்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி அவசியம்.
இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒப்புதல் கோரியது. முறையான விதிமுறைகளைப் பின்பற்றியதால் அதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தென்னக ரயில்வேக்கு கீழ் சிவப்பு நிற வகைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலை பெறுவது இதுவே முதல்முறை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரயில் நிலைய கழிவு நீரை மறுசூழற்சி செய்து நீர் வீணாவதை குறைத்து, நிலம் மாசுபடுவதை குறைத்துள்ளதால் இது சாத்தியமாக்கியுள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:தென்னக ரயில்வே மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்