சென்னை: ஆவடி காவல் நிலயத்திற்குள்பட்ட காமராஜர் நகரில், அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனுடன் பாரும் இயங்குகிறது. நேற்று முந்தினம் (ஜன 26) குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக மது பாட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் பாரில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக சுமார் 1,282 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். பின்னர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இது தொடர்பாக பெருமாள், சிக்கந்தர் என இருவரை கைது செய்தனர். மேலும் இருவரையும் மது விலக்கு பிரிவு காவலர்களிடம் ஒப்படடைத்தனர்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற அரசு மது விற்பனைக்கு தடை விதிக்கும் நாட்களில் முறையான ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவிகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் நகை பணம் திருட்டு - இளைஞர் கைது