சென்னை: முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நினைவிட பணிகள் ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா நினைவுச் சின்னம்' அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நினைவு சின்னத்தை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் 'பேனா நினைவு சின்னம்' அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு விரைவில் கட்டுமான பணிகளை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அறிவுத்தல்படி இரவுநேர பாடசாலைத் திட்டம் - விஜய் பிறந்தநாளில் அறிவிப்பு!