ETV Bharat / state

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை! - தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா

சென்னை, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது எனவும்,  திருத்தும் பொழுது செல்போனில் பேசிக்கொண்டோ, குழுவாகப் பேசிக்கொண்டோ  திருத்தினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தேர்வுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் செல்போன் தடை- மீறினால் நடவடிக்கை
author img

By

Published : Mar 28, 2023, 8:32 PM IST

சென்னை: கடந்த காலங்களில் விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செய்த தவறினால் தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டி, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ளார்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் அந்த மாவட்டங்களில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு திருத்துவதற்காக விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் தேர்வர்கள் கண்காணிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

  • தேர்வு மையத்தின் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் முகாம் அலுவலர், ஆசிரியரிடமிருந்து விடைத்தாள் கட்டுகளை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகைச்சீட்டினை சரிபார்த்து முதன்மை தேர்வாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கையொப்பமிட வேண்டும்.
  • விடைத்தாளை திருத்தும் பணியில் முதன்மை தேர்வாளர்களாக நியமிக்கப்படுபவர்களும், விடைத்தாள் திருத்தும் பணியினை கூர்ந்தாய்வு செய்வதற்காக நியமிக்கப்படும் அனுபவமிக்க ஆசிரியர்களும் ஒருநாள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும்.
  • இவர்கள் விடைத்தாள் கட்டுக்களை பெற்றவுடன் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். விடைத்தாளை மதிப்பீடு செய்யும்போது விடைக்குறிப்பினை மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
  • விடைக்குறிப்பில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அது சார்ந்த தெளிவுரைகளை விடைத்தாள் மதிப்பீடு செய்த முதல் நாள் அன்றே முகாம் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • முதன்மைத் தேர்வர்கள், குறுந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக அளவில் வேறுபாடுகள், மறு கூட்டல் மதிப்பீடுகளின்போது கண்டறியப்பட்டு தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர் பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தன் மதிப்பீடு செய்யும்போது மிகவும் கவனமுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
  • ஒரு மாணவர் விடைத்தாளின் நடுவில் இரு பக்கங்களில் எழுதாமல் விடுத்து, அதனை அடுத்த பக்கத்தில் இருந்து எழுதியிருந்ததால் அந்த மாணவர் நீதிமன்றத்தை நாடி மதிப்பெண் பெற்ற வரலாறும் இருக்கிறது.
  • விடைக்குறிப்பின்படி, வழங்கப்பட்டுள்ள அதிகப்பட்ச மதிப்பெண்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விடைக்குறிப்புடன் வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட அதிகப்பட்ச மதிப்பெண் வழங்கியது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டு தேர்வு துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.
  • விடைத்தாளின் அனைத்து பக்கங்கள் மற்றும் தேர்வர்கள் விடை எழுதிய கடைசி வரியின் கீழ், அரசுத் தேர்வு துறையின் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே விடைத் தாளைத் திருத்தும் ஆசிரியர் அதற்குரிய பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குள் செல்போன் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. திருத்தும் அறையில் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விடைத்தாள் திருத்தும்போது குழுவில் பேசிக்கொண்டோ, அலைபேசியில் பேசிக்கொண்டோ விடைத்தாள் திருத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  • உணவு உண்பதற்காக முகாமை விட்டு வீட்டிற்குச்சென்று அல்லது ஹோட்டலுக்குச் சென்று வருவது சிறந்த நடத்தை இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பணியின்போது முகாமை விட்டு வெளியில் செல்லக்கூடாது. இதனை முகாம் அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
  • முகாம் நடைபெறும்போது எந்த வித கூட்டமும் நடத்த அனுமதிக்கக் கூடாது. முகாம் நடைபெறும் இடத்திற்கு வெளி ஆட்கள் வருவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்வித்துறை சார்ந்தவர்கள் கூட முகாம் பணி இல்லையெனில் வரக்கூடாது.
  • விடைத்தாளில் கூட்டல் பிழை இருந்தாலும், மதிப்பீடு செய்யப்படாமல் விடை இருந்தாலும் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட விடையின் மதிப்பெண் பதியப்படாமல் இருந்தாலும் அல்லது பொதுவான கூட்டல் பிழை இருந்தாலும் கூர்ந்தாய் அலுவலர் முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.
  • விடைத்தாள் திருத்தும் பணிக்கு சரியாக காலை 8.30 மணிக்கு மதிப்பிட்டு முகாமிற்கு வருகை புரிய வேண்டும்.
  • உதவி தேர்வாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் தவறுகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, கவனக்குறைவு ஏற்படுத்தாத வகையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும்’ என அதில் கூறிப்பட்டுள்ளது.
    இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.