ETV Bharat / state

'கல்லறைத்தோட்டம் அமைக்க 3 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' - செஃபி பேராயம் அமைச்சரிடம் கோரிக்கை

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத்தோட்டப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழ்நாடு அரசு கல்லறைத்தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என செஃபி பேராயம் சார்பில் தமிழ்நாடு தலைவர் பேராயர் மேசக் ராஜா, அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
author img

By

Published : May 9, 2022, 10:17 PM IST

சென்னை: செஃபி பேராயத்தின் சார்பில் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மே 9) சந்தித்தனர்.

இந்தச்சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு ஆனதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். மேலும் செஃபி பேராயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்தனர்.

அதில், "சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானியக்கோரிக்கையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செஃபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

1997ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகள் விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும், மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால், இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள தாலுகாவிலும் 3 ஏக்கர் கல்லறைத் தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர்.

கட்டாய மதமாற்றம் இல்லை: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செஃபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா, "தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழ்நாடு அரசு கல்லறைத்தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரவேண்டும். ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழ்நாடு அரசு கல்லறைத்தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரவேண்டும்

தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகின்றது.

பொது இடங்களில் மதப் பரப்புரை செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூறுகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.