சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் கீழ்கட்டளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று (ஆக .03) இரவு தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
உடனே இதுகுறித்து அருண், பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், கோயில் உண்டியல், வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் இருதரப்பினரிடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு