சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டின் வெளியே 2 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் பெட்ரொல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து அவர் சிட்லப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் சீதாராமன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சிகளில், 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, வீட்டை நோட்டமிடுகின்றனர். அதன் பின் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், பலரை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு...கண்டமங்கலத்தில் போலீஸ் குவிப்பு