ETV Bharat / state

பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை - நடந்தது என்ன?

author img

By

Published : Jun 19, 2021, 10:47 AM IST

பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விடிய விடிய தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரை நண்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தயிருப்பதாக காவல் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

madhan
பப்ஜி

சென்னை: பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி, பப்ஜி விளையாட்டைத் தனது யூ-ட்யூபில் வெளியிட்டு வந்ததற்காக பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரியில் மதிகோன்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படையினர் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர். அவரது மனைவி கிருத்திகா, மதனின் யூ-ட்யூப் பக்கத்திற்கு நிர்வாகியாக இருந்த காரணத்திற்காக, ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னைக்கு அழைத்துவரப்பட்ட மதனிடம், விடிய விடிய மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

வீடியோ பார்ப்பவர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மதனிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தைக் காவல் துறையினர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

அவரை இன்று(ஜுன்.19) நண்பகலுக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மதனின் மனைவி கிருத்திகாவையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.